பாலிவுட்டையே கலங்கடித்த பிரபல தமிழ் நடிகர்!

  கண்மணி   | Last Modified : 27 May, 2019 11:25 am
kanjana-hindi-remake-producer-to-meet-raghavan

"காஞ்சனா" திரைப்படம் வெளியாகி எட்டு வருடங்கள் ஓடிவிட்ட நிலையில், தற்போது இத்திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இந்த படத்தை ராகவா லாரன்ஸே இயக்க, பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமார் நாயகனாக  நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்புக்கு இடையில், ராகவாவின் அனுமதியின்றி  காஞ்சனா இந்தி ரீமேக்கான 'லட்சுமி பாம்' படத்தின் பர்ஸ்ட்  லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர்.

இந்த படத்தின் இயக்குனரான ராகவாவின் அனுமதியின்றி பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதால் அதிருப்தி அடைந்த ராகவா. 'தன் மானமே பெரிது' என கூறி 'லட்சுமி பாம்' படத்தை தான் இயக்க போவதில்லை என அறிவித்தார். பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகரான அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கும் படத்தை கைவிட்ட தமிழ் இயக்குனர் யார்? என பாலிவுட் வட்டாரங்கள் தேடிவரும் நிலையில், காஞ்சனா ரீமேக் பட தாயரிப்பாளர், ராகவாவை சமாதானப்படுத்த சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பாலிவுட்டையே கலங்கடித்து தனது கெத்தை காட்டியுள்ளார் ராகவா லாரன்ஸ். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close