சிம்புவுடன் ஹன்சிகா வைரலாகும் புகைப்படம்

  கண்மணி   | Last Modified : 27 May, 2019 12:46 pm
simbu-hansika-photo

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மஹா என்கிற படத்தில் நடிகை  ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். யு.ஆர்.ஜமீல் இயக்கி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பல சர்ச்சைக்கு ஆளாகியது. இருந்தும் மனம் தளராத படக்குழுவினர் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு, தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சிம்பு ஹன்சிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே சிம்பு-ஹன்சிகாவுக்கிடையே காதல் மலர்ந்ததாகவும், கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்ததாகவும் சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close