நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த பிரபல பாடகரும், இசையமைப்பாளரும்

  கண்மணி   | Last Modified : 27 May, 2019 09:21 pm
balasubramaniam-meet-ilaiyaraaja

தமிழ் திரையுலகில் நன்கு அறியப்பட்டவர்கள் இளையராஜாவும், எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர்கள் இணைந்து பணியாற்றிய பெரும்பாலான படங்கள் வெற்றியை மட்டுமே கண்டுள்ளது. இணையற்ற இசை, பாடல் துறையின் ஜாம்பவன்களான இருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதோடு தனது அனுமதியின்றி எஸ்.பி.பி தான் இசையமைத்த பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என இளையாராஜா நோட்டிஸ் அனுப்பியிருந்தார்.

 இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் ஜூன் 2-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இளையராஜாவின் கச்சேரியில் எஸ்.பி.பி பாடவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில்,  சமீபத்தில் இருவரும் சந்தித்தது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close