அனிரூத் வெளியிட்ட மங்கி டாங்கி ஃபர்ஸ்ட் லுக்...!

  கண்மணி   | Last Modified : 28 May, 2019 12:32 pm
the-first-look-of-monkeydonkey

பிரபல ஆங்கில திரைப்படமான  `பேபிஸ் டே அவுட்' பாணியில் உருவாகி வரும் புதிய படம் `மங்கி டாங்கி'. இந்த  திரைப்படத்தில்  கிஷோர், பேபி யுவினா,  ஸ்ரீராம்,  வந்தனா, யோஜ்ஜைபீ உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர்  தயாரிக்கும்  இந்த படத்திற்கு சூரஜ் குரூப் இசையமைக்கவும், கண்ணன் ஒளிப்பதிவு செய்யவும், ரிசல் ஜைனி படத்தொகுப்பிற்கும் ஒப்பந்தமாகி, பணியாற்றி வருகின்றனர்.

அபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் இணைந்து இயக்கும் மங்கி டாங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிரூத் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் குழந்தையுடன் மூன்று பேர் மிருகங்கள் நிறைந்த காட்டிற்குள் சிக்கியது போன்ற காட்சி உள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close