96 இசையமைப்பாளர் குறித்த இளையராஜாவின் சர்ச்சை கருத்து !

  கண்மணி   | Last Modified : 28 May, 2019 12:33 pm
ilaiyaraja-s-controversial-comment

அனைவராலும் அறியப்பட்ட மதிக்கத்தக்க இசை ஜாம்பவான் என புகழப்படுபவர் இசை ஜானி இளையராஜா. இவர் சமீப காலமாகவே அதிக சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறி வருகிறார். அதன் தொடர்ச்சியாக தனியார் யூ-டியூப் சேனலுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், கடந்த ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தின் இசையமைப்பாளர் குறித்து மிக மோசமான வர்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

அதாவது 96 படத்தில் இளையராஜா பாடலான 'யமுனை ஆற்றிலே' பாடலை பயன்படுத்தியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த இளையராஜா, இன்னொரு இசையமைப்பாளரின் பாடலைப் பயன்படுத்துவது ஆண்மையில்லாத தனமாக இருக்கிறது" என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.  இளையராஜாவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தால் ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினர் அதிருப்தியில் உள்ளனர். 96 திரைப்படத்தில் கோவிந்த் வசந்த் இசையமைத்த மற்ற பாடல்கள் பல விருதுகளை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close