மீண்டும் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு ?

  கண்மணி   | Last Modified : 29 May, 2019 03:02 pm
does-indian-2-movie-shooting-restart

கமல்ஹாசன், நடிப்பில் 1996ல் திரைக்கு வந்து பிரம்மாண்ட வெற்றி கொடுத்த படம் இந்தியன்.  இந்த படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகு  இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் படத்தின் இயக்குனர் சங்கர். இந்தியன் இரண்டாம் பாகம், கமலுக்கு ஜோடியாக  நடிக்க காஜல் அகர்வால்  ஒப்பந்தம் செய்யப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், இயக்குனருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான பென் மூவீஸ் நிறுவனம் ஒதுக்கிய பட்ஜெட்டிற்குள் படத்தை எடுத்து முடிக்க இயக்குனர் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளதால், விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ‘இந்தியன் 2’ திரைப்படம் இயக்குனர் சங்கரின் கனவுப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்திற்கு இசையமைக்க அனிரூத் ஒப்பந்தமாகியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close