ஆர்யாவை 'காதலின் நண்பர்' என கூறிய நடிகர்!

  கண்மணி   | Last Modified : 29 May, 2019 02:57 pm
parthiban-twit-about-arya

பார்த்திபனின் புதிய படைப்பாக உருவாகி கொண்டிருக்கும் படம்  'ஒத்த செருப்பு சைஸ் 7'. இந்த படத்திற்கு இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு- ராம்ஜி. 

வித்தியாசங்களை மட்டுமே தனது பெரும்பலான படங்களில் பிரதிபலிக்கும் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ட்ரைலர் குறித்து ட்விட் செய்துள்ள ஆர்யா, "எப்பொழுதுமே வித்தியாசமாகவும் அதனை சிறப்பாகவும் செய்கிறீர்கள்" என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த பதிவிற்கு பதில் ட்விட் செய்துள்ள பார்த்திபன், "யாருய்யா? இந்த காலத்துல அடுத்தவன் வெற்றிக்கு வாழ்த்துறது? தன்னலமற்ற ரசிகர்களைத் தவிர யார்கிட்டயும் எதிர்பார்க்க முடியாத அந்த நற்பண்புள்ள நம்ம காதலின் நண்பர் ஆர்யாவுக்கு நன்றி!" என பதிவிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close