கொலைகார பொம்மையை வீட்டிற்குள் கொண்டுவரும் பெற்றோர்! ட்ரைலர் உள்ளே..

  கண்மணி   | Last Modified : 29 May, 2019 02:57 pm
annabelle-comes-home-trailer

'அன்னாபெல்' படம் இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இந்த பாகத்திற்கு 'ANNABELLE COMES HOME'  என பெயரிடப்பட்டுள்ளது.

`ப்ளட் மங்கி', `அன்னாபெல், `தி நன்', `இட்' போன்ற படங்களை தயாரித்த கேரி டௌபர்மேந்தான் 'ANNABELLE COMES HOME' படத்தை இயக்குகிறார். இதுதான் இவரின் இயக்கத்தில் வரும் முதல் படமாகும். ஜூன் 26ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் படத்தின் பெயருக்கேற்ப மிரட்டும் அன்னாபெல் பொம்மை வீட்டிலுள்ள கண்ணாடி பெட்டியில் அடைக்கப்படுகிறது. பின்னர் அங்குள்ள சிறுமியால் விடுவிக்கப்பட்டு மற்றவர்களை அந்த பொம்மை துன்புறுத்துவது போன்ற த்ரில்லர் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close