சூர்யா ரசிகர்களை ஏமாற்றிய கட் - அவுட்: காரணம் உள்ளே

  கண்மணி   | Last Modified : 30 May, 2019 09:57 pm
ngk-world-s-largest-cut-out

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’என்.ஜி.கே'. அரசியல் கதையம்சம் கொண்ட இப்படம்   நாளை (வெள்ளிக்கிழமை) திரைக்கு வர உள்ளது.

இதனையொட்டி, திருத்தணியில் சுமார் 215 அடியில் சூர்யாவின் என்.ஜி.கே. லுக்கில் ரசிகர்கள் கட்-அவுட் வைத்தனர். இந்த கட்-அவுட் தான் இந்திய வரலாற்றில் முதன் முறையாக எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு மிக உயரமானதாகும். இந்த கட்- அவுட் வைக்க சுமார் ரூ.6.5 லட்சம் செலவு செய்திருக்கிறார்களாம் ரசிகர்கள்.

இந்நிலையில், முறையான அனுமதி பெற்றும் வேறு சில கார‌ணங்களால் சூர்யாவின் பிரமாண்ட கட்- அவுட்டை நகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். என் ஜி கே திரைப்படம் நாளை வெளிவரும் நிலையில், இன்று சூர்யாவின் கட்-அவுட் அகற்றப்பட்டதால் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர் சூர்யாவின் ரசிகர்கள்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close