வைரலாகும் வரலட்சுமி சரத்குமாரின் ஸ்டண்ட் வீடியோ!

  கண்மணி   | Last Modified : 30 May, 2019 10:32 pm
varalakshmi-sarathkumar-new-video

தமிழில் தனது தில்லான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்த வரலட்சுமி சரத்குமார், கன்னடத்தில் ரணம் படத்தில் நடித்து வருகிறார், இதனை தொடர்ந்து,வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்' என்கிற படத்தில் நடிக்கிறார்.  இந்த திரைப்படம் ஆக்‌ஷன்  த்ரில்லர் படமாக உருவாகிறது.

மேலும், இத்திரைப்படம் தஷி இசையில், மைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் முழுக்க முழுக்க மலேசியாவில் உருவாகி வருகிறது.  இந்நிலையில் இந்த படத்திற்காக‌  சண்டை பயிற்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் வரலட்சுமி. இந்த வீடியோவில் சண்டை பயிற்சி செய்யும் ஒருவர் வரலட்சுமியை தூக்கி சுற்றுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோவில் ஸ்டண்ட் செய்யும் நபருக்கும், வரலட்சுமிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

— varalaxmi sarathkumar (@varusarath) May 29, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close