ரசிகர்களே என் வரம்: சூர்யாவின் ட்விட்

  கண்மணி   | Last Modified : 31 May, 2019 09:44 am
surya-s-twit-about-fans

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்'NGK.' அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள, இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதோடு தனுஷ் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்.ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி  'NGK' படம் இன்று(மே31) ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

திரைக்கு வந்த முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள  'NGK' படம்  குறித்து ட்விட் செய்துள்ள சூர்யா "அன்பே தவம். அன்பே வரம்..வெற்றி தோல்விகளைக் கடந்து  மானசீகமாக என்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே என் வரம். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து இயக்குகிறது. அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன். உங்களுக்கும், இறைவனுக்கும் உள்ளம் நெகிழும் நன்றிகள்" என பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close