கும்பகோணத்தில் கணிதமேதை ராமானுஜர் நினைவுப் பூங்கா திறப்பு விழா 

  Newstm Desk   | Last Modified : 31 May, 2019 04:10 pm
the-opening-ceremony-of-the-mathematical-ramanuja-memorial-park-in-kumbakonam

கும்பகோணத்தின் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் கணிதமேதை ராமானுஜர் நினைவு பூங்காவை 2003 ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தற்போது இந்த வளாகம் தனியார் நிறுவன நிதியிலிருந்து சுமார்  5 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு.  இன்று திறப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவில், கல்லூரி முதல்வர் குருசாமி ரிப்பன் வெட்டி புதுப்பிக்கப்பட்ட பூங்காவை திறந்துவைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் என்சிசி 8வது பெட்டாலியன் தலைமை அதிகாரி கர்னல் நாயர் நாராயணி, நிதி நிறுவன தலைவர் கார்த்திகேயன், என்சிசி அலுவலர் எட்வேர்ட் சாமுவேல், கல்லூரி பேராசிரியர்கள் ரமேஷ் தங்கராசு குணசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டு கணித மேதை ராமானுஜர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close