திரைக்கு வந்த நீயா 2 படத்திற்கு தடை

  கண்மணி   | Last Modified : 01 Jun, 2019 10:02 pm
neeya2-movie-banned

சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம்  'நீயா 2.  இதில் ஜெய்,  வரலட்சுமி, ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.  எல்.சுரேஷ் இயக்கிய  இந்தப் படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரித்திருந்தார். திரையிட்ட கையோடு படத்தின் தொலைக்காட்சி உரிமையை விற்பனை செய்யவும் தயாரிப்பு நிறுவனம் மும்மரம் காட்டி வந்தது.

இந்நிலையில்,  விஜய் கோத்தாத்திரி என்பவர், விஜய் சேதுபதி நடித்த மெல்லிசை படத்தை தயாரிப்பதற்காக தன்னிடம்,  ஸ்ரீதர் ரூ 1.10 கோடியை கடனாக பெற்று, அதில் ரூ 75 லட்சத்தை கொடுத்துவிட்டார். மீதித்தொகையை கொடுக்கும் வரை நீயா2 திரைப்படத்தின் உரிமையை தொலைக்காட்சிக்கு விற்பனை செய்ய தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் நீயா2 திரைப்படத்தை டிவி சேனலுக்கு விற்பனை செய்யவதில் தடை ஏற்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close