போலீசில் புகார் அளித்ததால் பறிபோனது 'மிஸ் சவுத் இந்தியா' பட்டம்

  கண்மணி   | Last Modified : 02 Jun, 2019 11:26 am
meera-mithun-lost-her-miss-south-india-title

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ்  சவுத் இந்தியா அழகிப் போட்டியில் பட்டம் பெற்றவர் மீரா மிதுன். இவர் 'தானா சேர்ந்த கூட்டம்' , '8 தோட்டாக்கள்' போன்ற பல்வேறு படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

சமீபத்தில் மீரா மிதுன் சென்னை காவல் ஆணையரிடம்   புகார் அளித்திருந்தார்.  அதில், மிஸ் தமிழ்நாடு தீவா 2019 என்ற பெயரில் அழகிப் போட்டியை நடத்த தான் திட்டமிட்டு உள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியை நடத்த கூடாது என,  அஜித் ரவி என்பவர் தொழில் போட்டி காரணமாக தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தும், தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தி வருவதாக மீரா மிதுன் குற்றம்சாட்டியிருந்தார். 

இந்நிலையில், மீராமிதுனுக்கு மிஸ்  சவுத் இந்தியா பட்டத்தை வழங்கிய நிறுவனம் அவரிடமிருந்து மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மிஸ் சவுத் இந்தியா போட்டியை நடத்த போவதாக  கூறி மீரா மிதுன் பலரை ஏமாற்றி பணம் பெற்றுள்ளார்.

அதைக் கேட்க சென்றவர்கள் மீது போலீசில் போலி புகார் கொடுத்துள்ளார். இதனால் நாங்கள் மீரா மிதுனுக்கு கொடுத்த மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை திரும்ப பெறுகிறோம். இனிமேல் மீரா மிதுன் தன்னை மிஸ் சவுத் இந்தியா என வெளியில் சொல்லிக்கொள்ள கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close