உச்சத்தை தொட்ட ரவுடி பேபி

  கண்மணி   | Last Modified : 04 Jun, 2019 11:04 am
rowdy-baby-song-get-500-million-viewers

மாரி படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் மாரி 2. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாலாஜி மோகன் இயக்கிய இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

கடந்த டிசம்பரில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தின் மூலம் இணைந்து ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்திருந்தனர்.

தனுஷ் எழுதி பாடியிருந்த 'ரவுடி பேபி' பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபு தேவா, நடனம் அமைத்திருந்தார். இந்த பாடல் வீடியோ வெளியானதில் இருந்து தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது.  அதன்படி ரவுடி பேபிபாடல்  வெளியாகி 149 நாட்களில் 500 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது. இந்த சாதனையை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close