ஒரே மேடையில் இளையராஜா மற்றும் எஸ்.பி.பி; ரசிகர்கள் உற்சாகம்!

  Newstm Desk   | Last Modified : 03 Jun, 2019 01:27 pm
new-building-for-musicians-association-ilaiyaraja-announced

இளையராஜாவின் 76ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னையில் நேற்று மாலை சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இளையராஜா தான் இசையமைத்த, பாடிய பாடல்களை பாடி அசத்தினார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி, ஜேசுதாஸ், மனோ உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். 

இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், இசைக்கலைஞர்களின் சங்கத்திற்காக கட்டடம் ஒன்றை சொந்த செலவில் கட்டிவருவதாக அவர் அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி மற்றும் இளையராஜா ஒரே மேடையில் நின்றதை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் தளபதி படத்தில் இருந்து 'காட்டுக்குயிலு...' பாடலுக்கு இளையராஜா இசையமைக்க, எஸ்.பி.பி மற்றும் இளையராஜா இணைந்து பாடினர். 

பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு எஸ்.பி.பி மற்றும் இளையராஜா ஒரே மேடையில் இணைந்து பாடல்களை பாடியது அங்கிருந்த ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close