தள‌பதி 63 குறித்த புதிய தகவலை வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்

  கண்மணி   | Last Modified : 05 Jun, 2019 12:43 pm
thalapathi-63-movie-new-update

அட்லீ‍‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக தளபதி 63 உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா நாயகியாகவும், கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தெறி, மெர்சல் படங்களுக்கு வசனம் எழுதிய ரமணகிரி வாசன் இந்த படத்திற்கும் வசனம் எழுதுகிறார். ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் இந்த படத்தை தயாரிக்கிறார்.
ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுவரை படத்திற்கான பெயரோ, கதையோ வெளிவராத நிலையில், "விஜய் 63 முழுவதும் மிரட்டல்" என நடிகர் விவேக் ட்விட் செய்திருந்தார்.  இந்த தகவலின் மூலம் விஜய்63  முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகிறது என தெரிகிறது.

இதனை அடுத்து தற்போது, ஏ. ஆர் ரஹ்மான் தளபதி63 படத்தின் 2 பாடல்களுக்கு  தான் இசையமைத்து வருவதாக ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டில் இயகுனர் அட்லீ, இசையமைக்கும் அறையில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு இங்கு இருப்பது யார் தெரியுமா.. என்கிற கேள்வியுடன் இரண்டு பாடல்களுக்கான இசை உருவாக உள்ளது, என கருத்திட்டுள்ளார். இந்த ட்விட்டை விஜயின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close