நடிகர் சங்கத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கார்த்தி !

  கண்மணி   | Last Modified : 07 Jun, 2019 01:44 pm
one-crore-donated-by-karthi

நடிகர் நாசர் தலைமையிலான அணி தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகித்து வருகின்றனர். இவர்கள் தலைமையில்
சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் கட்டுமான பணிக்காக நடிகர் சங்கம் சார்பில் செலிப்ரிட்டி கிரிக்கெட் மற்றும் மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அதன்  மூலம் நிதி திரட்டியும், நடிகர் சங்க  கட்டடத்தை  கட்டி முடிக்க போதிய நிதி கிடைக்காமல் திணறி வந்துள்ளனர் நடிகர் சங்க பொறுப்பாளர்கள். மேலும், நடிகர் சங்க தேர்தல் வரும் ஜூன்.23ம் தேதி நடைபெறவுள்ளதால் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகரும், நடிகர் சங்க பொருளாலருமான கார்த்தி ரூ.1 கோடியை நடிகர் சங்க கட்டட பணிக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close