சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்: நாசருக்கு எதிராக களமிறங்கும் பாக்யராஜ்!

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2019 05:28 pm
election-of-actor-s-association-actor-bhagyaraj-contest-against-nassar

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு நாசருக்கு போட்டியாக நடிகர் பாக்யராஜ் களமிறங்க உள்ளார்.

நடிகர் சங்க தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு  நடிகர் விஷால் இன்று மனுதாக்கல் செய்தார். இதன்பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘நடிகர் சங்க கட்டடத்தை கட்டவிடாமல் நீதிமன்றம் மூலம் எஸ்.வி.சேகர் தடுக்க முயற்சிக்கிறார். எஸ்.வி.சேகர் தொடர்ந்த வழக்குகளால் நடிகர் சங்க கட்டடப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கட்டடப் பணியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இன்னும் 6 மாத காலத்தில்  நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும். கடந்த தேர்தலில் பாண்டவர் அணியான  நாங்கள் சொன்னதைவிட அதிகம் செய்துள்ளோம். எங்கள் அணியில் குஷ்பு சேர்ந்ததற்காக, அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

தென்னிந்திய  நடிகர் சங்க தேர்தலில், பல்வேறு பதவிகளுக்காக விஷால் அணியில் இருந்து 22 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பொதுச் செயலாளார் பதவிக்கு விஷால், துணைத் தலைவர் பதவிக்கு பூச்சி முருகன்,  கருணாஸ் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு குஷ்பு, ரமணா, நந்தா, கோவை சரளா உள்பட 19 பேரும் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.

தென்னிந்திய  நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசருக்கு போட்டியாக நடிக்க பாக்யராஜ் களமிறங்குகிறார். அவரது அணியை சேர்ந்த ஐசரி கணேஷ், விஷாலுக்கு எதிராக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close