நாங்களும் சவுகிதார் தான் : நடிகர் பாக்யராஜ் "நச்" பேட்டி

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2019 08:59 pm
let-s-face-the-election-as-modi-baghyaraj

சவுகிதார் எனக் கூறி பிரதமர் நரேந்திர மோடி தேர்தலை சந்தித்ததை போன்று,நாங்களும் நடிகர் சங்கத்தை பாதுகாக்க வந்துள்ளோம் என்று, நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின் நடிகர் பாக்யராஜ் பேட்டியளித்துள்ளார். 

மேலும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுதுள்ளதாக தெரிவித்த பாக்ராஜ், எங்கள் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசரி கணேஷ், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 6 மாதத்தில்  நடிகர் சங்க கட்டட பணிகளை முடிப்போம் என்று உறுதியளித்துள்ளார். 

தென்னிந்திய  நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணிக்கும், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close