'ஜிகர்தண்டா' தெலுங்கு ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

  கண்மணி   | Last Modified : 10 Jun, 2019 07:14 pm
valmi-release-date-announcement

கடந்த 2014 -ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஜிகர்தண்டா'. இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். இதில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். குறிப்பாக சிம்ஹா நடித்த, "அசால்ட் சேது" என்ற கதாபாத்திரம் அவருக்கு தேசிய விருதைப் பெற்று தந்தது. 

தற்போது ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்காக ‘வால்மீகி’ திரைப்படம் உருவாகி வருகிறது.  அல்லு அர்ஜூன் நடித்திருந்த 'துவ்வடா ஜகநாதம்' படத்தின் இயக்குநர் ஹரீஷ் ஷங்கர் இந்த படத்தை இயக்குகிறார்.  

தவிர, ஜிகர்தண்டாவின் தெலுங்கு ரீமேக்கில் வருண் தேஜ் முன்னணி கதாபாத்திரத்திலும், முக்கிய வேடத்தில் தமிழ் நடிகர் அதர்வாவும் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. அதன்படி, வரும் செப்டம்பர் 6 -ஆம் தேதி ‘வால்மீகி'  படம் திரைக்கு வர உள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close