பிரபல நாடக ஆசிரியர் கிரேஸி மோகன் காலமானார்

  அனிதா   | Last Modified : 10 Jun, 2019 02:35 pm
crazy-mohan-passed-away

பிரபல நகைச்சுவை நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவும், நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 

கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவின் மூலம், பல்வேறு நவீன நாடகங்களை அரங்கேற்றம் செய்தவர் கிரேஸி மோகன், வயது 66.  சதி லீலாவதி, மைக்கேல் மதன காமராஜன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். அவற்றில் நடிக்கவும் செய்துள்ளார். மெட்டி ஒலி, உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.

இவர், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு திரைப்பட கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close