சமந்தா தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பரபரப்பாக நடித்து வரும் பிரபல நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தமிழ்மொழி படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்தது.
பலதரப்பட்ட விமர்சனங்களையும் சமந்தாவிற்கு பெற்று தந்தது. அதையடுத்து வெளியான சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள தெலுங்குமொழி படமான மஜ்லி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ராட்சசன் தெலுங்கு ரீமேக்கில் தற்போது சமந்தா நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமந்தா கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் ட்விட் செய்துள்ள சமந்தா, "நான் கர்ப்பமாக இருக்கிறேனா? எப்படி கண்டுபிடித்தீர்கள் , எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்" என கருத்திட்டு அவரின் டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.
Damnnn ....... is she ? When you find out please let us know https://t.co/Gk3oYnABYU
— Baby Akkineni (@Samanthaprabhu2) June 10, 2019
newstm.in