BV நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா "ஓ பேபி" என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சுனிதா டாடி தயாரித்துள்ளார். மேலும் "ஓ பேபி" திரைப்படம், 2014 -இல் வெளிவந்த கொரிய மொழி காமெடித் திரைப்படமான 'மிஸ் கிராணி' படத்தின் தழுவலாகும். இத்திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை லட்சுமி, ராவ் ரமேஷ், நாகா சௌர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தற்போது, இந்த படத்திலிருந்து "Naalo Maimarapu' என்னும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் நாயகன் நாகா சௌர்யாவும், நாயகியான சமந்தாவும் இடம்பெற்றுள்ள ரொமான்டிக் காட்சிகள் மற்றும் பாடல் உருவான விதம் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
newstm.in