போட்டியின்றி தலைவரான இயக்குனர் பாரதிராஜா

  கண்மணி   | Last Modified : 11 Jun, 2019 10:56 am
tamilnadu-film-director-s-association-leader-bharathiraja

சென்னையில் தென்னிந்திய இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தேர்தல் இந்த மாதம் நடைபெற உள்ளது.  இந்நிலையில் நேற்று (ஜூன்10)  தனியார் திரையரங்கில் நடைபெற்ற இயக்குனர்கள் சங்க கூட்டத்தில், போட்டியிட யாரும் முன் வராத காரணத்தாலும், மூத்த இயக்குனர் என்பதாலும்  பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா  இயக்குனர் சங்கத்தின் தலைவராக  போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டார்.

இந்த சங்கத்தின் முந்தைய தலைவராக இருந்த இயக்குனர் விக்ரமன்  உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சங்க தேர்தலில் போட்டியிட வில்லை என கூறப்படுகிறது. மற்ற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட நேற்று (ஜூன்10) நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2000 மற்றும் 2008ம் ஆண்டு நடைபெற்ற  இயக்குனர் சங்க தேர்தலில் பாரதிராஜா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close