இணையத்தில் வைரலாகி வரும் சூர்யாவின் "தண்டல்காரன்" பாடல்

  கண்மணி   | Last Modified : 11 Jun, 2019 04:45 pm
thandalkaaran-song-video-from-ngk

"தானா சேர்ந்த கூட்டம்" படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த மே 31 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'NGK'. இதனை செல்வராகவன் இயக்கியிருந்தார். அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள, இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதோடு தனுஷ் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்.  கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும், இந்த படத்தில் இருந்து "தண்டல்காரன்" என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரஞ்சித் பாடியுள்ளார்.  மோசமான அரசியல்வாதிகளை விமர்சிக்கும் வரிகளை கொண்ட இந்த பாடல் இணைய தளத்தில் பலரால் ஆர்வமுடன் பார்க்கப்பட்டு வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close