தனுஷின் 'மாயாபஜாரு' பாடல் உள்ளே

  கண்மணி   | Last Modified : 11 Jun, 2019 04:45 pm
maaya-bazaaru-song-from-pakkiri

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் படமான  "தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்" என்கிற படத்தில் நடித்துள்ளார்.   கென் ஸ்காட் என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  

சமீபத்தில் இதன் தமிழ் பதிப்பான 'பக்கிரி' படத்தின் ட்ரைலர்  வெளியானதை தொடர்ந்து  "இங்கிலீஷு லவுசு " என்கிற பாடல் வெளியானது. இந்தப் பாடலை அடுத்து தற்போது அந்தத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  'மாயாபஜாரு' என்கிற மற்றொரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

அமித் திரிவேதி இசையில்,  மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளுடனும்,  பென்னி தயால் மற்றும் நிக்கிதா காந்தி இருவரின் பின்னணி குரலில் 'மாயா பஜாரு' பாடல் அமைந்துள்ளது.  இத்திரைப்படம் வரும் ஜூன்.21ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close