ரஜினி, கமல் யாருக்கு ஆதரவு?, பாக்யராஜ் மீது புகார்

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2019 04:45 pm
rajini-kamal-whom-support-complaint-against-bhagyaraj

நடிகர் சங்க தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூறும் வரை வதந்தி பரப்ப வேண்டாம் என்று, நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் பொதுச்செயலாளராக போட்டியிடும் விஷால் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், ’நடிகர் சங்க தேர்தல் எப்போது நடைபெற்றாலும் எதிரணி என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். அனைத்துத் துறைகளில் இருப்பது போலவே சினிமாவிலும் வெற்றி, தோல்வி என்பதும் உள்ளது’ என்றும் விஷால் கூறியுள்ளார்.

இதனிடையே, நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும், பாக்யராஜ் நாடக  நடிகர்கள் பற்றி தவறாக பேசியதாக, அவர் மீது கருணாஸ் புகாரளித்துள்ளார். ஏழ்மையில் இருக்கும் நாடக  நடிகர்களுக்கு பணம் கொடுப்பது வாடிக்கை என்று பாக்யராஜ் கூறியதாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளார்.

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close