மரண மாஸ் காட்டும் அஜித்தின் 'லுக்'; ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு..

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2019 03:20 pm
ajith-movie-trailer-will-be-released-today-by-6pm

வினோத் இயக்கத்தில் அஜித்  நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் இந்தி ரீமேக் தான் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை'. இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய வினோத், இப்படத்தை இயக்குகிறார். இசை - யுவன்சங்கர் ராஜா; ஒளிப்பதிவு - நீரவ்ஷா.

அஜித் வழக்கறிஞராகவும், அவருக்கு ஜோடியாக வித்யா பாலனும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாகவும், பிற பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. 

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.  

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close