ஜெயம் ரவி பாடலுக்கான ப்ரோமோ உள்ளே!

  கண்மணி   | Last Modified : 13 Jun, 2019 03:09 pm
comali-singletrack-from-june-20

நடிகர் ஜெயம் ரவி,  பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். கமலின் தசாவதாரம் திரைப்படத்தை அடுத்து, ஓர் நடிகர்  9 கெட்டப்புகளில் நடித்து உருவாகும் படம் 'கோமாளி' என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் இந்த படத்திலிருந்து 9 கெட்டப்புகளுக்கான போஸ்டர், ஜெயம் ரவி நடித்துள்ள வேடங்களான காட்டுவாசி முதல் மாணவன் வரை என வரிசையாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட உள்ள கோமாளி திரைப்ப‌டத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close