சிவகார்த்திகேயன் விஜய் டிவி புதிய ஒப்பந்தம்!

  கண்மணி   | Last Modified : 14 Jun, 2019 11:56 am
nenjamundu-nermaiyundu-oduraja-satellite-rights-bagged-by-vijaytelevision

சின்னத்திரை ஹீரோ  ரியோ கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள  'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தை கார்த்திக் வேணுகோபலன் இயக்கியுள்ளார். 'சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஷபீர் இசையமைத்துள்ள 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படம் இன்று முதல் (ஜுன் 14) திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டெலிவிஷன்ஸ், சிவகார்த்திகேயனிடமிருந்து வாங்கியுள்ளனர்.

விஜய் டிவி தயாரித்த பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமடைந்தவர் சிவகார்த்திகேயன். அதுமட்டுமின்றி அவர் திரையுலகில் பிரபலமான நடிகராக உயர்ந்த போதும் தன் வாழ்க்கையில் பெரும் அடையாளத்தை ஏற்படுத்திய விஜய் டிவியின் மீதான அபிமானம் குறையாமல், அந்த நிறுவனம் நடத்தும் முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் கலந்து கொண்டு சிறப்பிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். அதற்கு பிரதிபலன்போல் விஜய்டிவி நிறுவனம், சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள திரைப்படத்தின் உரிமையை தற்போது விலைக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close