விஷாலை விளாசிய வரலட்சுமி!

  கண்மணி   | Last Modified : 14 Jun, 2019 01:19 pm
varalakshmi-is-angry-with-vishal

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணி முந்தைய நடிகர் சங்க பொறுப்பாளர்களாக இருந்த சரத்குமார் மற்றும் ராதாரவி உள்ளிட்டோர் அடங்கிய அணிக்கு எதிராக போட்டி யிட்டு வெற்றி பெற்றனர்.  

அதோடு தேர்தல் வாக்குறுதியான நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இந்நிலையில் நாசர் தலைமையிலான அணியின் பதிவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைவதால் நடிகர் சங்க தேர்தல் வரும் ஜுன் 23ம் தேதி நடைபெறவுள்ளது.  

தேர்தலை முன்னிட்டு நாசர் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோ, முந்தைய தேர்தலின் போது நடைபெற்ற பரப்புரை மற்றும் சரத்குமார் மீதான குற்றச்சாட்டு உள்ளிட்டவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த வீடியோவில் முந்தைய சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்க பொறுப்பாளர்கள் ஊழல் வாதிகள் என்றும் நடிகர் சங்கத்ட்திற்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த மோசடி கும்பல் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுதேர்தலோ, நடிகர்சங்க தேர்தலோ ஒரு அணியினர் மற்றொரு அணியினரை வசை பாடி அதன் மூலம் ஓட்டு சேகரிப்பது நடைமுறைதான்.

 

இந்நிலையில் தனது தந்தையான சரத்குமாரை அசிங்கப்படுத்திவிட்டீர்கள் என வரலட்சுமி சரத்குமார் பொங்கி எழுந்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விஷால் கூறுவது பொய் என பலருக்கும் தெரியும். மேலும் இந்த முறை உங்கள் அணியான பாண்டவர் அணியின் மீது பலர் அதிருப்தியில் உள்ளனர்.

அதோடு எனது தந்தையான சரத்குமாரை மிக மோஷமாக சித்தரித்துள்ளீர்கள்  இது மிகவும் கண்டிக்க தக்கது என பதிவிட்டுள்ள வரலட்சுமி. என்னுடைய ஓட்டு உங்களுக்கில்லை என கருத்திட்டுள்ளார். கடந்த தேர்தலில் வரலட்சுமி சரத்குமார், விஷால் அணிக்கு  ஆதரவாக  செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close