பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் அசுரன் திரைப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் . அசுரன் திரைப்படம் வெற்றி மாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் நான்காவது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கோவில்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
தனுஷுடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும் கருணாஸ் மகன் கென் கருணாசாஸ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜீ.வீ.பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள 'அசுரன்' படத்தின் டீசர் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in