இத்தனை வருடங்கள் கடந்தும் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கரகாட்டக்காரன் 

  கண்மணி   | Last Modified : 16 Jun, 2019 12:03 pm
30-years-of-karakattakaran

கங்கை அமரன் இயக்கத்தில் 1989ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி திரைக்குவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் கரகாட்டக்காரன் .  இந்த திரைப்படம் ராமராஜனின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், கனகா என்னும் நாயகியையும் திரையுலகிற்கு அறிமுகம் செய்த திரைப்படமாகும். இளையராஜாவின் இசையில் அமைந்த இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றன.

அந்த காலக்கட்டிடத்தில் நகைச்சுவை நடிகர்களில் மிகப்பிரபலமாக இருந்த கவுண்டமணி- செந்தில்இணையின் காமெடியும் இந்த படம் வெற்றி பெற  ஒரு காரணம் என்று சொன்னால் மிகையாகாது.   இவர்களின் வாழைப்பழ காமெடியும், 'காரை வச்சுருந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சுருக்க' என்கிற டைலாக்கும்  இன்றும் நம்முடன் மீம்ஸ் வடிவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மதுரை மாநகரில் உள்ள திரையரங்குகளில் ஒரு வருடத்திற்கும் மேலாக திரையிடப்பட்டு சாதனை படைத்த  கரகாட்டக்காரன் திரைப்படத்திற்கு 1989ல் சிறந்த திரைப்படத்திற்கான விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. . கரகாட்ட கலைங்கர்கள் இடையேயான காதலை நகைச்சுவையுடனும், ஒரிஜினல் கிராம பாணியை  அள்ளிக்கொடுத்த இந்த படம் வெளிநாடுகளான ஜப்பான், உருசியா போன்ற நாடுகளிலும் திரையிடப்பட்டு அங்குள்ள மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த கரகாட்டக்காரன்  திரைப்படம் திரையிடப்பட்டு இன்றுடன் 30 வருடங்கள் ஆகின்றது.  இருப்பினும்  கரகாட்டக்காரன் போன்ற மற்றோரு திரைப்படம் அதாவது  கரகாட்டக்காரன் 2 எடுக்கப்பட வேண்டும் என்பதே ரசிங்கர்களின் ஆசையாக உள்ளது.

newstm.in   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close