முன்கூட்டியே ரிலீஸ் செய்யப்பட உள்ள தலயின் நேர்கொண்ட பார்வை?

  கண்மணி   | Last Modified : 16 Jun, 2019 12:03 pm
thala-ajith-s-nerkonda-paarvai-release-date-changed

முன்கூட்டியே ரிலீஸ் செய்யப்பட உள்ள தலயின் படம்? 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் இந்தி ரீமேக் தான் 'நேர்கொண்ட பார்வை'. இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய வினோத், இப்படத்தை இயக்கியுள்ளார். இசை - யுவன்சங்கர் ராஜா; ஒளிப்பதிவு - நீரவ்ஷா.

அஜித் வழக்கறிஞராகவும், அவருக்கு ஜோடியாக வித்யா பாலனும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரம் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். அதாவது ஜூலை 26 அல்லது ஆகஸ்ட் 1ம் தேதி நேர்கொண்ட பார்வை திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவல் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது. 

newstm.in   

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close