விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள ஆதித்யா வர்மா டிசர் எப்படி இருக்கு?

  கண்மணி   | Last Modified : 16 Jun, 2019 04:28 pm
adithya-varma-official-teaser

தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக‌ 'ஆதித்யா வர்மா' உருவாகிறது. இந்த படத்தில், விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் துருவ் ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை பனிதா சந்து தமிழில் அறிமுகமாகிறார். 

 அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இப்படத்தை இயக்கியுள்ளார். இறுதி பணிகளை நெருங்கியுள்ள ஆதித்யா வர்மாவின் டிசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் துருவ் தனது தந்தையான சியான் விக்ரமின் தோற்றத்தை  பிரதிபலிக்கிறார் என்றே சொல்லலாம்.

கோவத்தை கட்டுப்படுத்த இயலாத நாயகனாக துருவ் இந்த படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு படத்தின் ரீமேக்கை ஒத்திருக்கும் இந்த படத்தில் போதை தொடர்பான விஷயங்களை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பது பலரது கருத்தாக உள்ளது. இருப்பினும் சியான் விக்ரமின் மகன் அறிமுகமாகும் ஆதித்யா வர்மா வெற்றியை பொருத்தே துருவின் சினிமா வளர்ச்சி இருக்கும். விக்ரம் போல துருவும் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

newstm.in    

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close