பிரபல இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி

  கண்மணி   | Last Modified : 17 Jun, 2019 02:51 pm
director-mani-ratnam-has-been-admitted-to-hospital

சினிமா ரசிகர்கள் பலரால் நன்கு அறியப்படடவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய பல தமிழ் படம் முதல் பாலிவுட் படம் வரை நல்ல வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம்.  தற்போது  பிரபல நட்சத்திரங்களை கொண்டு தனது கனவு படமான 'பொன்னியின் செல்வன்' என்கிற படத்தை உருவாக்குவதில் மும்மரமாக செயல்பட்டுவருகிறார் மணிரத்தினம்.

இந்நிலையில் மணிரத்னம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிசைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு 'யுவா' படப்பிடிப்பின் போது மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். 

அதேபோன்று 2015ம் ஆண்டும் இதயம் சம்மந்தமான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த மணிரத்னம் தற்போதும் இதய கோளாறு காரணமாகவே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

newstm.in  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close