சிந்துபாத் ட்ரைலர் ரிலீஸாவதற்கு முன்பே படத்தின் கதையை  சொன்னார் விஜய் சேதுபதி !

  கண்மணி   | Last Modified : 17 Jun, 2019 01:20 pm
sindhubaadh-trailer-release

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி உள்ள சிந்துபாத் திரைப்படத்தை அருண்குமார் இயக்கியுள்ளார்.ஏற்கனவே இவர்களின் கூட்டணியில்  பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வந்துள்ளன.

தற்போது உருவாகியுள்ள சிந்துபாத் திரைப்படத்தில் அஞ்சலி, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி உள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது .

இந்நிலையில் சமீபத்தில் நடந்த சிந்துபாத் திரைப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசிய விஜய் சேதுபதி, இந்த படம் குறித்த முக்கிய விஷயத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அதாவது வெளிநாட்டிற்கு கடத்தி செல்லப்படும் தன்னுடைய மனைவியை எவ்வாறு நாயகன் காப்பாற்றுகிறான் என்பதுதான் இந்த படத்தின் கதையாம். அதோடு நிறுத்தி கொள்ளாமல் ,  கேட்க்கும் திறன் குறைபாடுடைய திருடனாக இந்த படத்தில் நடித்துள்ளேன் என்ற கதாநாயகன் பற்றிய ரகசியத்தையும் வெளிப்படையாக  போட்டு உடைத்துள்ளார் விஜய் சேதுபதி. கதையை வெளிப்படையாக செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்த விஜய் சேதுபதியின் இந்த செயலால், என்ன செய்வதென்று அறியாமல் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனராம் . 

newstm.in  

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close