அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் விருந்து: அஜித் 60 ரிலீஸ் தேதியை அறிவித்தார் போனிகபூர்! 

  கண்மணி   | Last Modified : 17 Jun, 2019 01:26 pm
ajith-next-movie-release-date

தல அஜித் தற்போது பாலிவுட்  தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தயாரிப்பில் "நேர்கொண்டபார்வை" என தலைப்பிடப்பட்ட  திரைப்படத்தில் நடித்துள்ளார்.  தலயுடன் வித்யா பாலன்,  ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய வினோத், இப்படத்தை இயக்கியுள்ளார்.

இறுதி கட்ட பணிகளை நெருங்கியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தhd படத்தை தொடர்ந்து ஏற்கனவே கூறியபடி, தல அஜித்தின் 60வது படத்தை வினோத் இயக்கத்தில்  போனிகபூரே தயாரிக்கவுள்ளார்.

 

இந்நிலையில் தனியார் ஆன்லைன் சேனலுக்கு பேட்டி கொடுத்த போனிகபூர் "தல 60" குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது தல 60 ஆக்ஸன் காட்சிகள் நிறைந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருக்கும் என்றும், வரும் ஆகஸ்ட் 29ம் தேதி பூஜையுடன் துவங்கும் தல 60, அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் 10 ம் தேதி திரைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.  அடுத்தடுத்து  அஜித் படம் திரைக்கு வர உள்ளதால் தல ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில்  உள்ளனர்.

newstm.in  

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close