போலீஸ் வேடமிடத் தயாராகும் விஜயகாந்தின் மகன்!

  கண்மணி   | Last Modified : 17 Jun, 2019 01:31 pm
vijayakanth-son-shanmuga-pandian-acting-as-a-police

சினிமா உலகில் மறக்க முடியாத பிரபல நடிகர்களில் விஜயகாந்த் குறிப்பிடத்தக்கவர். இவர் பெரும்பாலும் காவல்துறை அதிகாரி  போன்ற வேடங்களையே ஏற்று நடித்துள்ளார். முழு அரசியல் வாதியாக  தன்னை திசை திருப்பி கொண்ட கேப்டன் விஜயகாந்தின் சினிமா வாரிசாக இவரின் மகன் சண்முக பாண்டியன் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் இவர் நடித்த 'சகாப்தம், மதுரவீரன், தமிழன் என்று சொல்' உள்ளிட்ட படங்கள் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டது .

இந்நிலையில் விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பூபாலன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சண்முகபாண்டியன். இந்த படத்தில் சண்முக பாண்டியன் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளாராம்.  இவருடன் ரோனிகா சிங், வம்சி கிருஷ்ணா, அர்ச்சனா, அழகம் பெருமாள்,முனீஷ்காந்த் உள்ளிடோறும் இணைந்து நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர்.

 

ஜூலை மாதம்  முதல் படப்பிடிப்பை துவங்க உள்ள சண்முக பாண்டியனின் புதிய படத்திற்கான தலைப்பை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  தனது தந்தையை போலவே  போலீஸ் அதிகாரி வேடம்  ஏற்று நடிக்க உள்ள சண்முக பாண்டியனுக்கு இந்த படமாவது வெற்றியை பெற்றுத்தருமா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

newstm.in  

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close