மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மணிரத்னம்!

  கண்மணி   | Last Modified : 17 Jun, 2019 03:20 pm
director-mani-ratnam-return-from-the-hospital

சினிமா ரசிகர்கள் பலரால் நன்கு அறியப்பட்டவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய பல தமிழ் படங்கள் பாலிவுட் திரையுலகம் வரை நல்ல வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம்.  தற்போது  பிரபல நட்சத்திரங்களை கொண்டு தனது கனவு படமான 'பொன்னியின் செல்வன்' என்கிற படத்தை உருவாக்குவதில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார் மணிரத்தினம்.

இதற்கிடையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் மணிரத்னம் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்  என்கிற தகவல் பரவி வந்தது, இது  தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி; "தனது கணவர் வழக்கமான  உடல் பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனைக்கு சென்றிருந்தார் என்றும், தற்போது பரிசோதனைகள் முடிவடைந்ததால், நலமுடன் வீடு திரும்பியுள்ளார் " என தெரிவித்துள்ளார்.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close