கவர்ச்சி உடை, இரட்டை அர்த்த வசனம்: பிக்பாஸ் - 3 நிகழ்ச்சிக்கு தடை?

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2019 09:46 pm
sexy-style-double-meaning-bigboss-3-show-banned

பிக்பாஸ் - 3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தணிக்கை செய்யாமல் ஒளிபரப்பக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர் சுதன் தாக்கல் செய்த மனுவில், 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் இளைஞர்கள், பார்வையாளர்களை பாதிக்கும் வகையில் கவர்ச்சி உடை, இரட்டை அர்த்த வசனம் உள்ளது. எனவே ஐபிஎஃப் தணிக்கை சான்று பெறாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசு, காவல் ஆணையர், கமல்ஹாசன், தொலைக்காட்சி நிறுவனம் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் சுதன் தாக்கல் செய்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close