'இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குனருடன் புலனாய்வில் ஈடுபடும் அரவிந்த் சாமி 

  கண்மணி   | Last Modified : 19 Jun, 2019 01:15 pm
arvind-swamy-next-with-santhosh-p-jayakumar

'ஹரஹர மஹாதேவகி'  திரைபடத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.  இவர் இயக்கிய  அடுத்தடுத்த படங்கள் ஏ யூ சான்றிதழ் பெற்ற படமாகவே இருந்து வந்தன.

ஆனால் தற்போது புதிய கதையமைப்பை கையில் எடுத்துள்ளார் சந்தோஷ். இவர்  பிரபல நடிகர் அரவிந்த் சாமியை நாயகனாக கொண்டு  மர்மம்  கலந்த   திரில்லரை  கதைக்களமாக கொண்ட புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை  எட்சட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மதியழகன்  என்பவர் தயாரித்து வருகிறார்.

'புலனாய்வு' என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அரவிந்த் சாமியின் பிறந்த நாளான நேற்று(18 ஜுன்)  வெளியிடப்பட்டுள்ளது.

newstm.in 

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close