விஜய் 63 குறித்து அடுத்த அப்டேட் எப்போது தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 19 Jun, 2019 01:19 pm
vijay-63-update-at-6pm-today

அட்லீ‍‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக விஜய் 63 உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் வில்லு படத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தில் தான், நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். தெறி, மெர்சல் படங்களுக்கு வசனம் எழுதிய ரமணகிரி வாசன் இந்த படத்திற்கும் வசனம் எழுதி வருகிறார். ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இதுவரை படத்திற்கான பெயரோ, கதையோ வெளிவராத நிலையில், "விஜய் 63 முழுவதும் மிரட்டல்" என நடிகர் விவேக் ட்விட் செய்திருந்தார்.  இதை தொடர்ந்து தற்போது  விஜய் 63 குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என அர்ச்சனா கல்பாத்தி, 'அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அனேகமாக இந்த தகவல் படத்தின் டைட்டில் குறித்த தகவலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close