தேர்தல் நிறுத்தப்பட பாண்டவர் அணியே காரணம்: எதிரணியினர் குற்றச்சாட்டு!

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2019 06:47 pm
south-indian-artist-association-election-stopped-due-to-pandavar-team-swami-sankarathaas-team

நடிகர் சங்கத் தேர்தல் திடீரென நிறுத்தப்பட்டதற்கு பாண்டவர் அணியினர் தான் முழுக்காரணம் என்று சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் உதயா திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். 

அதில், "நடிகர் சங்கத் தேர்தல் திடீரென நிறுத்தப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. நீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுத்திருந்தாலும் தேர்தலை நிறுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது. 

தேர்தல் நிறுத்தப்பட நாங்கள் தான் காரணம் என்று பாண்டவர் அணியினர் கூறி வருகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. இந்த தேர்தல் நடைபெறாததற்கு பாண்டவர் அணியினர் தான் முழுக்காரணம். அவர்கள் ஆவணங்களை முறையாக பராமரிக்காதது தான் தேர்தல் ரத்தாக காரணம்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை! - பதிவாளர் அதிரடி உத்தரவு

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close