ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

  கண்மணி   | Last Modified : 19 Jun, 2019 06:41 pm
aadai-tamil-official-teaser

இயக்குனர் ஏ. எல்.விஜயுடனான விவாகரத்தை பெற்றதற்கு பின்னர் அமலாபால் தனக்கான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையான ”ஆடை” என்கிற படத்தில் நடித்துள்ளார் அமலாபால்.

இந்த திரைப்படத்தை 'மேயாத மான்'  படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். அதோடு  'வி ஸ்டூடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு  தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.  

இந்த படத்தில் அதிகப்படியான கவர்ச்சி மற்றும் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதனிடையே ஆடை படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  டீசரில் நாயகியான அமலா பாலை கடத்தி சென்று ஒரு அரையில், ஆடை இல்லாமல் பூட்டி வைத்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த டீசர் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு சிலர் அமலா பாலின் துணிச்சலான நடிப்பை பாராட்டினாலும், மறுசாரார் ஆடையின்றி பாலிவுட் நடிகை போல நடித்திருப்பது அசிங்கமில்லையா என்கிற விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.

ஆனால், இந்த டீசர் வெளியாகியுள்ளதன் மூலம் இந்த திரைப்படம் தற்போது அதிகமாக நடைபெற்றுவரும் இளம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த கதைகளமாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close