விஜய் சேதுபதியின்  சிந்துபாத் திரைப்பட ரிலீஸுக்கு தடை!

  கண்மணி   | Last Modified : 19 Jun, 2019 06:45 pm
vijay-sethupathi-s-sindhubaadh-movie-is-banned-for-release

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள முதல் படம் சிந்துபாத். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி  உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கிய அருண்குமார் சிந்துபாத் படத்தை இயக்கியுள்ளார்.

வரும் ஜூன் 21ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிந்துபாத் படத்தை திரையிட கூடாது என ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தடை கோரி ஹைதரபாத் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

சிந்துபாத் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ள கே புரடக்‌ஷன்ஸ் ராஜராஜன் நிறுவனத்திற்கும் ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இடையிலான பணப்பிரச்னையின் காரணமாக சிந்து பாத் படத்திற்கு தடை கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close