விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு 'விஜய் 63' பட ஃபர்ஸ்ட் லுக் விரைவில்..

  கண்மணி   | Last Modified : 20 Jun, 2019 04:39 pm
thalapathy-63-first-look-release-date

அட்லீ‍‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக 'விஜய் 63' உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் வில்லு படத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தில் தான், நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். தெறி, மெர்சல் படங்களுக்கு வசனம் எழுதிய ரமணகிரி வாசன் இந்த படத்திற்கும் வசனம் எழுதி வருகிறார். ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம் இந்த படத்தை தயாரிக்கிறார்.  இதுவரை படத்திற்கான பெயரோ, கதையோ வெளிவராத நிலையில், "அர்ச்சனா கல்பாத்தி, 'அவருடைய டுவிட்டர் பக்கத்தில், வருகிற ஜீன் 21ம் தேதியோடு தளபதி 63 என சொல்வதை நிறுத்திக்கொள்ளலாம், ஏனென்றால் அன்றைய தினம் விஜய் 63வது படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட உள்ளோம் என பதிவிட்டுள்ளார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close