'ராட்சசி' இசை இன்று முதல்

  கண்மணி   | Last Modified : 20 Jun, 2019 11:34 am
raatchasi-audio-from-today

தனது சினிமா வாழ்க்கையில் செகண்ட் எண்ட்ரியிலும் கலக்கிவரும் நடிகை ஜோதிகா. அடுத்தடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்துவருகிறார். அதன்படி தற்போது அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கும் 'ராட்சசி' படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தில், ஜோதிகா அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார்.  இதில், பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மெத்தனமாக இருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக செயல்பட்டு, மாணவர்களை நல்வழிப்படுத்தும் நல்லாசிரியரின் கதையாக இந்த படம் இருக்கும் என்பதை படத்தின் ட்ரைலர் மூலம் அறிய முடிகிறது. இந்நிலையில் ராட்சசி படத்திலிருந்து ஆடியோ இன்று(20 ஜூன்) மாலை வெளியிடப்பட உள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை! - ராட்சசி ட்ரைலர்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close