ஆளுநருடன் சுவாமி சங்கரதாஸ் அணியினர் சந்திப்பு!

  அனிதா   | Last Modified : 20 Jun, 2019 12:55 pm
swami-sankaradas-teammates-meet-governor

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடவிருந்த சங்கரதாஸ் அணியினை சேர்ந்த ஐசரி கணேஷ், பிரசாந்த் உள்ளிட்டோர் இன்று தமிழக ஆளுநரை சந்தித்து பேசினர். 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகர் பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறயிருந்த நிலையில், நேற்று தேர்தலை ரத்து செய்து மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த ஐசரி கணேஷ், பிரசாந்த், சங்கீதா மற்றும் குட்டி பத்மினி ஆகியோர் இன்று ராஜ்பவன் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரேஹித்தை சந்தித்து பேசினர். 

நேற்றைய தினம் பாண்டவர் அணி சார்பில் விஷால், கருணாஸ் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close